மைத்திரி - ரணிலுக்கு இடையில் மீண்டும் மோதல்!

Report Print Vethu Vethu in அரசியல்

அரசாங்க நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பத்தில் மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் தலைவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் மீண்டும் முறுகல் ஏற்பட்டள்ளது.

இலங்கை வங்கி தலைவராக செயற்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரெஜினோல்ட் சீ பெரேராவை மீண்டும் நியமிப்பதற்கு, பிரதமர் பரிந்துரை செய்த போது ஜனாதிபதி அதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

ரெஜினோல்ட் சீ பெரேராவுக்கு எதிராக பாரிய நிதி குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை வங்கிக்கு தலைவராக வேறு ஒருவரின் பெயரை பரிந்துரை செய்யுமாறு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வங்கிககள் உட்பட அரச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் இயக்குனர் சபை உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை பிரதமரின் தலையீட்டில் இடம்பெற வண்டும்.

எனினும் பல அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமையினால் ஏற்கனவே பதவியில் இருந்த பலர் பதவியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers