விரைவில் பிரதமர் பதவியுடன் ஆளுங்கட்சி வரிசையில் மஹிந்த அணி! நாமலின் தகவல்

Report Print Rakesh in அரசியல்
251Shares

நாங்கள் தோற்கவில்லை, சர்வதேசத்தின் கூட்டுச் சதியால் தோற்கடிக்கப்பட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், தனது தந்தையின் தலைமையில் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பதவி ஆசை பிடித்த இந்த அரசு நிரந்தரமில்லை. பதவி ஆசை பிடித்த இந்த பிரதமரும் நிரந்தரமில்லை. அதிகாரப் பகிர்வு என்று கூறி இந்த நாட்டை இந்த அரசு இரண்டாகப் பிளவுபடுத்த பார்க்கின்றது.

எனினும், பிரதான எதிர்க்கட்சியான நாம் இதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கமாட்டோம். இன்று எதிர்க்கட்சி வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியுடன்அமர்ந்திருக்கும் நாம், விரைவில் பிரதமர் பதவியுடன் ஆளுங்கட்சி வரிசையில்அமர்வோம்.

நாட்டு மக்கள் எமது பக்கமே உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் இதனை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.

தேர்தலை இந்த அரசு இழுத்தடித்தால் பெரும்பான்மைப் பலத்துடன் நாம் ஆட்சியமைத்துக் காட்டுவோம். நாட்டை முன்னேற்றிக் காட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.