இலங்கை அரச தலைவர்கள் மீது போர் குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in அரசியல்

உலகில் எந்த நாட்டின் அரச தலைவர்கள் மீதும் சுமத்தப்படாத அளவுக்கு இலங்கையின் முன்னாள் மற்றும் தற்போதைய அரச தலைவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் மீதே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அடங்குகிறார்.

இதனை தவிர முன்னாள் பிரதமர்கள் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

Latest Offers