திருமலையில் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம்

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கட்சியின் 27 உறுப்பினர்களை கொண்ட தலைமைக்குழுவின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

ரெலோ கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

சமகால அரசியல் நிலைமை, நேற்று கூடிய அரசமைப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் யோசனைத் திட்டம் ஆகியவை உட்பட பல விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம், நேற்று பிற்பகல் 3 மணிக்கு கல்முனையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாவட்டக் குழு தெரிவுகள் நடைபெற்றுள்ளன.

மேலும் இன்று திருகோணமலை மாவட்டத்துக்கான கட்சியின் இளைஞர் அணி, மாவட்ட குழு தெரிவும் இடம்பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற கல்முனைக் கூட்டத்தில் ரெலோவின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, கோவிந்தன் கருணாகரம், கிருஷ்ணமூர்த்தி, பிரசன்னா இந்திரகுமார், ஹென்றி மகேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் உட்படப் பிரமுகர்கள் பலர் பங்குபற்றியுள்ளனர்.

Latest Offers