பொலிஸ் மா அதிபருக்கு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் அழைப்பு

Report Print Gokulan Gokulan in அரசியல்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதன்போது, பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நாமல் குமார வெளியிட்டுள்ள தகவல்களுக்கு அமையவே, பொலிஸ் மா அதிபருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers