ராஜபக்ச ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்! திலும் அமுனுகம

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ராஜபக்ச ஒருவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே திலும் அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்தனி கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளும் ஒரு வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டு வருமா என்பது எமக்கு தெரியாது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில் எமது கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயம் ராஜபக்ச ஒருவர் நிறுத்தப்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது மற்றும் அவர் வெற்றி பெறுவது என்பன வேறு விடயங்கள்.

அவர்கள் எமது வேட்பாளருக்கு ஆதரவளிப்பார்களா இல்லையா என்பது வேறு விடயம். எனினும் நாட்டு மக்கள் மகிந்த ராஜபக்சவுக்காகவே தமது வாக்குகளை வழங்குவார்கள்.

இந்த நாட்டு மக்கள் மகிந்த ராஜபக்சவையோ விரும்புகின்றனர், நம்புகின்றனர். இதனால், மகிந்த ராஜபக்சவே சிறந்த வேட்பாளர்.

19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டிட முடியாதபடி செய்துள்ளதால், அவருக்கு பதிலாக வேறு ஒரு ராஜபக்சவுக்கு வாக்களிக்க நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அப்படி பார்க்கும் போது மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ச அல்ல எனவும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Latest Offers