1948 இல் அதிகாரத்தை பரவலாக்கியிருக்கலாம்! லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற போது அதிகாரத்தை பரவலாக்கியிருந்தால், தற்போது இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதிகாரங்களை பரவலாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இருந்து வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியே மாகாணசபை முறையை நாட்டில் அறிமுகப்படுத்தியது எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான யோசனை குறித்து கருத்து வெளியிடும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைகளை ஒவ்வொன்றாக கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்க முடியும் எனவும் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers