இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக இதுவரை தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பிரதேசத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. அனைத்து கட்சிகளின் இணக்கப்பாடுகளுடனும் இத தொடர்பாக தீர்மானிக்கப்படும் என கட்சிகளின் தலைவர்கள் பலமுறை கூறியுள்ளனர்.

இதனால், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers