நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் முன்னெடுக்கப்பட்டுள்ள சிரமதான பணிகள்

Report Print Suman Suman in அரசியல்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பகுதியில் அங்கஜன் இராமநாதனை தலைமையாக கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் அணியினரால் இன்று துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பகுதியின் பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட பொது இடங்களில் இவ்வாறு துப்புரவு செய்யப்பட்டுள்ளன.

பிரதேச ரீதியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் போன்றோரால் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை தென்னிலங்கையிலிருந்து நாமல் ராஜபக்சவின் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்கு வருகை தர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலை கட்டடத்திற்கு வர்ணம் பூசி மாணவர்களிற்கு கையளிக்கப்படவுள்ளதுடன், பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களும் கையளிக்கப்பட உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் குறித்த பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers