மைத்திரி- மகிந்த கூட்டணி தொடர்பான இறுதி முடிவு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து உருவாக்க முயற்சித்து வரும் கூட்டணி சம்பந்தமான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் 21 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“ ரணிலுக்கு எதிராக உருவாக்கப்படும் மெகா கூட்டணி அடுத்த மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதி என எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும்.

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரே நிறுத்தப்படுவார். தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முன்னணியில் இருக்கி்ன்றார். அடுத்து கோத்தபாய ராஜபக்ச இருக்கின்றார். ஆனால், யார் தேர்தலில் போட்டியிடுவது என்று மைத்திரிக்கும் கோத்தபாயவுக்கு தீர்மானிக்க முடியாது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவுமே தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியின் தலைவர்களே தீர்மானிப்பர்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால், பிரசார மேடையில் முதலில் கோத்தபாய உரையாற்றுவார். கோத்தபாய வேட்பாளரானால், முதல் உரையை மைத்திரி ஆற்றுவார்” என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers