யாழில் இடம்பெற்ற அரசியல் கருத்தரங்கு

Report Print Sumi in அரசியல்

யாழில், கருத்துக்களால் களமாடுவோம் எனும் தொனிப்பொருளில் அரசியல் கருத்தரங்கொன்று இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மாலை யாழ்ப்பாணம் அரசியல் ஆர்வலர் குழாமின் ஏற்பாட்டில் தற்போது இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.

நிகழ்ச்சித் தொகுப்பாளரான முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, அரசியல் களம் ஆரம்பமானது.

இதன் போது கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையுரை ஆற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பிரம்மஸ்ரீ. ப.மனோகரக்குருக்கள் மற்றும் தென்னிந்திய திருச்சபை போராயர் டானியல் தியாகராசா உட்பட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொறியியல் பீடம் சுப்பிரமணியம் சிவகுமார், யாழ்ப். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மற்றும் மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

இவர்களின் கருத்துரைகளுக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் பதிலுரைகளை வழங்குவார்.

இந்த நிகழ்வில் மதகுருமார்கள், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உட்பட வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், கம்பவரிதி ஜெயராமன் உட்பட அரசியல் பிரமுகர்கள், அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers