கிழக்கு ஆளுநர் நியமனம் சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கும்!

Report Print Mubarak in அரசியல்

மூவின மக்களும் சமாதானமாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் நடுநிலையாக செயற்படாத ஒரு அரசியல்வாதியை ஆளுநராக ஜனாதிபதி நியமித்தமை எதிர்காலத்தில் சமாதனத்திற்கு குந்தகம் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

ஜனாதிபதி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த தமிழ் பேசும் மக்களிற்கு ஜனாதிபதியின் பிரதி உபகாரமாக ஆளுநர்கள் நியமனத்தை நாம் நோக்கினாலும் மேல் மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இரண்டு முஸ்லீம்களை நியமித்துள்ளார்.

ஆயினும் வடக்கிற்கு மாத்திரம் ஒரு தமிழரை ஆளுனராக நியமித்து அதிலும் பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது.

இது முஸ்லீம்களின் ஆதரவை எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ளும் செயலானாலும் தமிழ் மக்களுக்கு பாராபாட்சம் காட்டப்பட்டுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் நேரடியாக இனவாதகருத்துக்களை கக்கிய ஒருவரை கிழக்கின் ஆளுனராக ஜனாதிபதி நியமித்துள்ளார். இனங்களுக்குள் ஒரு நடுநிலையாக செயற்படுவாரா? என்ற கேள்வி எம் மத்தியில் காணப்படுகிறது.

திருகோணமலை மூதூர் சூடைக்குடா மத்தளமலை முருகன் ஆலயத்தினை உடைப்பேன் என்று முன்னாள் ஆளுனர் ரோகித போகொல்லாகம அவர்களின் மனைவியார் கூறி அவ்வாலயத்திற்கு சென்று அதிகார செயல்களில் ஈடுபட்ட போதும் ஜனாதிபதி அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்.

இன்று மட்டக்களப்பு காளி கோயிலை உடைத்த ஒருவரை ஆளுனராக நியமித்துள்ளார். அவ்விடயங்கள் தமிழ் மக்களின் மீது ஜனாதிபதி பாராபட்சமாக நடக்கிறார் என்பதை தொட்டத் தெளிவாக உணர்த்துகிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Latest Offers