கூட்டமைப்பின் தேவையை ரணில் நிறைவேற்றுவார்! மகிந்த அணியினர் குற்றச்சாட்டு

Report Print Murali Murali in அரசியல்

அரச பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பிரதமர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவைப்படி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொஸ்கம பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் குறித்து ஒவ்வொரு கட்சியிலும் வெவ்வேறான கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்நிலையில், உடன்பாட்டு அடிப்படையில் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும். அனைத்து தலைவர்களும் பல தடவைகள் இதனைக் கூறியுள்ளனர்.

அதன்படி இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை என்றும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers