மகிந்த விகாரைகளில் கூறும் கதைகளை நாடாளுமன்றத்தில் கூறுவதில்லை

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமாக விகாரைகளில் கூறும் கதைகளுக்கு முற்றிலும் மாறுப்பட்ட கதைகளை நாடாளுமன்றத்தில் கூறுவதாக அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவில்மடவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹலீம் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சபைக் கூடிய போது, நாட்டின் ஒற்றையாட்சி தன்மையை பாதுகாத்து, பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெளிவாக கூறினார்.

நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அனைத்து மதங்களை சமமாக கருதுமாறும் மதங்களுக்கு இடையில் பேதங்கள் ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது என தெரிவித்தார்.

அதற்கு பிரதமர் இணங்கினார். மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பேசும் படியே செயற்பட்டால், நாட்டுக்கு அதிக நன்மை கிடைக்கும் என தான் எண்ணுவதாக அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers