வடக்கில் இலவச வீடுகளை வழங்க அமைச்சர் சஜித் உத்தரவு!

Report Print Thileepan Thileepan in அரசியல்

வடக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இலவச வீட்டுத்திட்டங்களை வழங்க அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தரவிட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் கெ.கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் 52ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் கெ.கலன்சூரிய கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இன, மத, கட்சி பேதமின்றி எந்த மக்களுக்கு வீடுகள் இல்லையோ அந்த மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும். அத்துடன் ஓமந்தை பிரதேசத்தில் வீடில்லாத 247 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இலவச வீட்டுத்திட்டங்களை வழங்க அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தரவிட்டுள்ளார் என்றும் கெ.கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பி.ஏ.கருணாதாச, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையின் உறுப்பினர் ஆர்.ஏ.அமலியா, வவுனியா நகரசபை உறுப்பினர் ஆர்.ஜானக மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers