மகிந்தவுடன் கூட்டு சேர்வதை சீர்குலைக்க வேண்டாம்! மைத்திரி அறிவுரை

Report Print Murali Murali in அரசியல்

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கட்டியெழுப்பப்படவுள்ள கூட்டமைப்பை சீ்ர்குலைக்கும் விதமாக கருத்துகள் விடுப்பதை தவிர்க்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கடந்த வாரத்தில் பொதுஜன பெரமுனவை விமர்சிக்கும் வகையிலான கருத்துகளை ஊடகங்களுக்கு விடுத்திருந்தனர்.

இதனால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, அதுகுறித்து கருத்துகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers