பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்துவேன்! புதிய ஆளநர் சூளுரை

Report Print Murali Murali in அரசியல்

போதைப்பொருள் பாவனை மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விசேட வேலைத்திட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“மேல் மாகாணத்தில் வீதிப்போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்த வேண்டும். அத்துடன், வணக்கஸ்தளங்களை ஒன்றிணைத்து அந்ததந்த பகுதிகளில் சுழல்பாதுகாப்பு தொடர்பில் அறிவுத்தவுள்ளோம்.

இந்நிலையில், மேல் மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையை மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

இதற்கான புதிய திட்டங்கள் வகுக்கவுள்ளோம். குறிப்பாக பாடசாலைகள் மற்றும் மத ஸ்தலங்களை அண்டிய பகுதிகளில் இவ்வாறான போதைப்பொருள் விற்பனைகளை முழுமையாக கட்டுப்படுத்த முடிவெடுத்துள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.

Latest Offers