அதிருப்தி அடைந்தவர்களும் எம்மோடு இணையலாம்! தயாசிறி அழைப்பு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்பில் அதிருப்தி அடைந்த அனைவரும் தம்முடன் இணைந்துக் கொள்ளுமாறு, அந்த கட்சியின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சந்தலங்காவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்து வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே கட்சி தொடர்பில் அதிருப்தி அடைந்தவர்கள் இருப்பாளர்களாயின் அவர்கள் தம்முடன் இந்த புதிய வேலைத்திட்டத்தில் இணைந்துக் கொள்ள முடியும் என்றார்.

Latest Offers