தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலே இது சாத்தியமாகும்!

Report Print Nesan Nesan in அரசியல்

தெருவில் நின்று விமர்சனம் பண்ணுவதை விடுத்து ஆக்கபூர்வமான செயற்பாட்டில் இளைஞர்கள் தங்களை உள்ளாக்க வேண்டும் என நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளரும் முன்னை நாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய தவராசா கலையரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுசரணையின் கீழ் வீடுகள் அற்ற வறிய குடும்பங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியல் ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை தமிழர்களுக்கு இருக்கின்றது. ஏன் எனில் தமிழ் மக்களின் அரசியல் இருப்பு தமிழர்களின் தாயக அபிவிருத்தி என்பன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலேயே சாத்தியமாகும் என்றும் கூறியுள்ளார்.

வெறுமனே தெருவில் நின்று விமர்சனம் செய்யாது இளைஞர்கள் தமிழர் தம் பிரச்சினைகளை தீர்க்க எம்மோடு கைகோர்க்க வேண்டும். இதில் உங்களுடைய உழைப்புக்கள் கடுமையாக இருக்க வேண்டும்.

வெறும் விமர்சனங்களை முன்வைக்ககூடாது. அரசியல்வாதிகளது பணி என்ன என்று கேட்க வேண்டும். தமிழர் நிலப்பரப்புக்களை இந்த நாட்டிலே அராஜகம் செய்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்ய முனைந்தனர்.

அதனை நாங்கள் துணிந்து நின்று எதிர்த்தோம் அவ்வாறு காப்பாற்றியதன் விளைவுதான் இந்த வீட்டு திட்டத்திற்கான காணிகளை நாங்கள் எமது மக்களுக்கு வழங்க முடிந்தது.

இல்லையெனில் படை முகாங்களாக மாறியிருக்கும் என்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers