ஜனாதிபதி மைத்திரிக்கு ஆசி வேண்டி பிரித்!

Report Print Nivetha in அரசியல்

ருவன்வெல்ல - லெவன்கம, சதாநன்தாராம விகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆசி வேண்டி 300 மகாசங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் விசேட பிரித் பாராயண நிகழ்வு நடைபெற்றது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டன.

பிரித் பாராயணத்தை தொடர்ந்து மகாசங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, பிரதேசத்தில் குறைந்த வசதிகளையுடைய விகாரைகளுக்கும், பிக்குகளுக்கும் தஹம் பாடசாலை பிள்ளைகளுக்கும் ஜனாதிபதியால் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers