உத்தேச அரசியல் அமைப்பினால் பொலிஸ் திணைக்களத்திற்கு பாரிய அச்சுறுத்தல்

Report Print Kamel Kamel in அரசியல்

உத்தேச அரசியல் அமைப்பினால் பொலிஸ் திணைக்களத்திற்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தேச அரசியல் அமைப்பில் மாகாண பொலிஸ் அலகுகள் பற்றி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குற்றப் புலனாய்வுப் பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு என்பன கடும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியிருப்பதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தேச புதிய அரசியல் அமைப்பின் கீழ் ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களமும் ஒன்பது அலகுகளாக பிளவுபடும் எனவும், தேசிய பொலிஸ் திணைக்களம் மாகாணசபை பொலிஸ் பிரிவு என பிளவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் திணைக்களத்தின் ஒன்பது பிரிவுகளுக்கும் ஒன்பது பொலிஸ் ஆணையாளர்கள் நியமிக்கப்படுவர் எனவும் ஒன்பது பொலிஸ் தலைமையகங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர்களே மாகாணசபைகள் பற்றி தீர்மானம் எடுப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers