அரசியலில் களமிறங்குகிறேனா? குமார் சங்கக்காரா அதிரடிப் பதில்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

சமூக வலைத்தளத்தில் வரும் அனைத்தையும் நம்ப வேண்டாம். நம்புவது உங்களுடைய மிகப்பெரிய தவறு என இலங்கையின் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் கிரிகெட் வீரர் குமார் சங்ககாரா ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் இருப்பதாகவும், இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் குமார் சங்கக்காரா எந்தவிதமான கருத்துக்களையும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவரின் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அதில், “ உங்களுக்கு என்று தனி மரியாதை உண்டு, கிரிக்கெட் வீரராக நீங்கள் ஒரு நல்ல பெயரைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அரசியல்வாதியாக மாறினால், அந்த நற்பெயரை பெறுவீரர்கள் என்று நினைக்காதீர்கள்?

நீங்கள் அரசியலில் சேர விரும்பினால் உங்கள் நற்பெயர் மற்றும் கௌரவம் முடிந்து விடும். இதனால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொள்ளுங்கள் ” என்று கருத்திட்டிருந்தார்.

இக்கருத்துக்கு பதில் கருத்துப் பதிவு செய்துள்ள சங்ககாரா, “ சமூக வலைத்தளத்தில் வரும் அனைத்து கருத்துகளையும் நம்ப வேண்டாம். நம்புவது உங்களுடைய மிகப்பெரிய தவறு. என்மீது வைத்துள்ள மதிப்புக்கு நன்றி ” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி வேட்பாளராக தான் களமிறக்கப்படுவது தவறான செய்தி என்பதை இதன் மூலமாக மறைமுகமாக அவர் குறிப்பிட்டிருக்கிறார் என அவரது ரசிகர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

எவ்வாறாயினும் அடுத்த தேர்தலிலும் ஜனாதிபதியாக பொது வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் களமிறக்கப்படுவார்கள் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

Latest Offers