இரணைமடுவில் நாமல் ராஜபக்சவின் நெகிழ்ச்சியான செயல்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தன்னுடன் சிறையில் இருந்த சக கைதியின் குடும்பத்தினரை தேடிச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்சவுடன், கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியினைச் சேர்ந்த ஆனந்த் என்னும் தமிழ் கைதியும் இருந்துள்ளார்.

இதன்போது, நாமல் ராஜபக்ச சிறையிலிருந்து வெளியே சென்றால், தன்னுடைய குடும்பத்தினருக்கு நிரந்தர வீட்டு வசதிகள் எவையும் இல்லை என்றும், எனவே வீட்டு வசதியினை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் கேட்டிருக்கின்றார்.

இந்நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்பின்னர், சிறையில் தனக்கு அறிமுகமாகிய நபரின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் உரையாடியதுடன், அவர்களுக்கான வீட்டு வசதியியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் சில நாட்களில் இந்த வீட்டு வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பேச்சுக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கு அறிமுகமான தமிழ் அரசியல் கைதிக்கு நாமல் ராஜபக்ச உதவியிருப்பது அக்குடும்பதினரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Latest Offers