அடுக்கடுக்கான கேள்விகள்! பொது அரங்கில் சுமந்திரனை தடுமாறச் செய்த வித்தியாதரன்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பேரினவாத அரசுகளிடம் இருந்து நாங்கள் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சம்பந்தன் ஐயாவும், சுமந்திரன் ஐயாவும் நம்புவது இனியும் சாத்தியமாகுமா? என மூத்த செய்தியாளர் வித்தியாதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அங்கு கேள்விகளைத் தொடுத்தார் வித்தியாதரன்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அதன் தலைவர் சம்பந்தன் சொன்னார். அப்போது உண்மை எங்கே போனது? நீங்கள் எங்கே போனீர்கள்?

இன்று நாங்கள் ஜனநாயகம் என்ற பெயரிலே ஒருமித்த நாடு, ஏக்கிய ராஜ்ஜியம் என்று ஏதோ ஒருவகையில் தீர்வினை திணிக்க முயல்கின்றோம். தென்னிலங்கை சிங்கள பௌத்த மனநிலையில் ஜனநாயக வழியில் அடிப்படை ஜனநாயக சுய நிர்ணய உரிமைகள் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்பதை இனியும் நம்ப முடியுமா? என்று சுமந்திரனிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

இதன்போது நடிகர் வடிவேலும் நகைச்சுவையை சுட்டிக்காட்டிப் பேசினார் வித்தியாதரன், நடிகர் வடிவேலு கைப்புள்ளையாக நடித்துக் கொண்டிருப்பார். தன்னுடைய உதவியாளரிடம் இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது?

பேரினவாத அரசுகளிடம் இருந்து நாங்கள் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சம்பந்தன் ஐயாவும், சுமந்திரன் ஐயாவும் நம்புவது இனியும் சாத்தியமாகுமா?

நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகை 56. 169 பேர் பிரசன்னமாகியிருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பேரில் 9 பேர் தான் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை ஐக்கிய தேசியக் கட்சி சார்பானவராக அடையாளப்படுத்தி, பேசும் பண்பு இருக்கிறது. ஒரு வரியில் ஒரு சட்ட மூலம் கொண்டுவந்தால், அதை சாதாரண ஒரு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றினால், மாகாண சபை உடனடியாக தேர்தல் நடத்த முடியும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தான் நம்பியிருக்கிறார். ஒரு வாரத்தில் அச்சட்டத்தை கொண்டு வருவதில் என்ன பிரச்சினை இருக்கிறது.

தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். விக்னேஸ்வரனை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. கஜேந்திரகுமாரைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை என்று தயவுசெய்து அறுதியிட்டுக்கூறுங்கள்.

ஆட்கள் அதிகளவில் தேவை என்று மகிந்த ராஜபக்ச தடுமாறினார். என்னுடைய நண்பர் ஒருவருக்குச் சொன்னாராம், வித்தியாதாரன் மூத்த பத்திரிகையாளர் தான். என்னை சுமந்திரனுடன் ஒரு டச் வைச்சிருக்கச் சொன்னவன். நான்தான் சரியாக அதைச் செய்யவில்லை. வைத்திருந்தால் இப்போது ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

இந்த இரண்டு தரப்போடும் நீங்கள் சமதூரத்தில் இல்லை என்னும் குற்றச்சாட்டு இருக்கிறது. கோப ஆவேசத்தோடு ரணில் விக்ரமசிங்கவை அணுக முடிந்த உங்களால், ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை அணுகமுடியவில்லையே ஏன்? சிங்கப்பூர் ஒப்ரேசனுக்கு முக்கியமான ஆள் நீங்கள் தானே?

உங்களது தமிழரசுக் கட்சி, உள்கட்சி ஜனநாயகம், விக்னேஸ்வரன் வயதுக்கு மூத்தவர், அவரை அழைப்பதற்காக தந்தை செல்வா ஜிஜி பொன்னம்பலம் வீட்டிற்குப் போனதுமாதிரி, மாவை சேனாதிராஜா விக்னேஸ்வரன் வீட்டிற்குப் போனால் கூட தப்பு இல்லை என்று, பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

புலிகள் கைவிட்ட தீர்மானம்! யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் பேச்சு