சில ஊடுருவிகள் பசுத்தோல் போர்த்திய புலிகளாக எம்மை சிதைக்க முயற்சி?

Report Print Nesan Nesan in அரசியல்

தமிழர்களை கொன்று குவித்த சில உதிரி கட்சிகள் கூட இன்று கூட்டமைப்பை விமர்சித்து சிதைக்க வேண்டும் என முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாவிதன்வெளி பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து இன்று மாலை மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழர்களை கொன்று குவித்த சில உதிரி கட்சிகள் கூட இன்று கூட்டமைப்பை விமர்சித்து சிதைக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் மூலம் சிலர் செயற்படுவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

இந்த நிலையில் தான் தமிழர்கள் விளிப்பாக இருக்க வேண்டும். சில ஊடுருவிகள் பசுத்தோல் போர்த்திய புலிகளாக எம்மை சிதைக்க முகநூல் மற்றும்

பல சமூக வலைத்தளங்களின் ஊடாக பிழையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தமிழ் மக்கள் மத்தியில் முன்வைத்து உளவியியல் ரீதியாக தாக்கத்தினை ஏற்படுத்துகின்றனர்.

இவ்வாற தாக்கத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் வெறுக்கின்ற நேரம் இலகுவாக பேரினவாத கட்சிகளும், அவர்களின் உதிரி கட்சிகளும் தமிழர்கள் மத்தியில் உள்வாங்கப்படலாம் என திட்டங்களை வகுக்கின்றன.

கடந்த காலங்களில் ஏனைய சமூகத்தவர்களின் பகுதியில் செய்யப்பட்ட அபிவிருத்திகளை விட தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி குன்றியளவிலே காணப்பட்டது.

இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய பிரச்சினைக்கான தீர்வுகளுக்கான நகர்வுகளை முன்னெடுக்கும்போது அபிவிருத்தியையும் சமமாக செயற்படுத்தவுள்ளோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.