மைத்திரியின் புதிய ஆலோசனை! சர்வதேச நெருக்கடிக்கு வித்திடும் அபாயம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய இணை அணுசரணையை விலக்கிக்கொள்வது குறித்து ஆலோசித்துவருவதாக அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும், மார்ச் மாதம் ஐநா அமர்வு இடம்பெறவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என்கின்றன அந்தத் தகவல்கள்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கவேண்டாம் என அவ்வேளை ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியாக பணியாற்றிய தற்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசின்ஹ கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அவ்வேளை வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட மங்கள சமரவீர இந்த ஆலோசனையை புறக்கணித்து தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கினார் என அவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை தனது இணை அனுசரனையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த முயற்சியானது சர்வதேச நெருக்கடியை இலக்கைக்கு கொடுக்கும் என்கின்றனர் தென்னிலங்கை அரசாயல் அவதானிகள்.

Latest Offers