அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறப் போவது யார்?

Report Print Ajith Ajith in அரசியல்

அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் ஊடகங்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அடுத்த ஜனாதிபதியும் பிரதமரும் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர்களாகவே இருப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாமும் இந்தத் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே பிரசாரம் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அரசியலமைப்பு நகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் மகா சங்கத்தினருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.