வீரவன்சவின் சொத்து விபரங்களை அம்பலப்படுத்த போவதாக எச்சரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் சொத்து விபரங்களை அம்பலப்படுத்த நேரிடும் என ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் வடடகல தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு பத்து மில்லியன் ரூபாவினை நட்டஈடாக செலுத்துமாறு, விமல் வீரவன்சவிற்கு கொழும்பு வர்த்தக நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நட்டஈட்டுத் தொகையை விமல் வீரவன்ச செலுத்த தவறினால் அவரது சொத்து விபரங்களை அம்பலப்படுத்த நேரிடும் என ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புலமைச் சொத்துக்களை கொள்ளையிட்டதாகத் தெரிவித்து விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers