இராணுவப் பிரதானியாக சவேந்திர சில்வா? ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் சம்பந்தன்

Report Print Rakesh in அரசியல்

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் தொடர்பில் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும், அதனை விடுத்து அவருக்கு பதவி உயர்வு வழங்குவது ஜனநாயகமாகாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களை இழைத்ததாக சர்வதேச சமூகத்தால் குற்றம் சுமத்தப்படும் 58ஆவது படைப் பிரிவின் தளபதியாக இருந்தவர் சவேந்திர சில்வா.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 9ஆம் திகதி, அவரை இராணுவப் பிரதானியாக நியமித்திருந்தார்.

இந்த நியமனத்திற்கு உள்நாட்டிலும், சர்வதேச சமூகத்திடமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.

இந்த நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பரிந்துரையை இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஐ.நா. சபையில் இலங்கையும் ஓர் உறுப்பு நாடு. ஐ.நா சபையின் நிபந்தனைகளை மீறி இலங்கை செயற்பட முடியாது என தெரிவித்துள்ளார்.

Latest Offers