த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த கொடுத்த மகிழ்ச்சி

Report Print Sujitha Sri in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு தாம் போக போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளரொருவரின் முகநூல் பதிவினை சுட்டிக்காட்டி ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்காக, எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுக்கொடுக்க மகிந்த தீர்மானத்துள்ளார்.

சம்பந்தன் வயது முதிர்ந்தவர் என்பதால் அவர் முன்னர் இருந்த வீட்டில் மாடி ஏற சிரமப்பட்டார். இந்த சந்தர்ப்பத்திலேயே அவருக்கு குறித்த வீடு வழங்கப்பட்டுள்ளது.

எனவே நான் அங்கு போகமாட்டேன். அவர் அங்கேயே இருக்கட்டும் என மகிந்த தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.