தொடர்ச்சியான அபிவிருத்திகள் தொடர வேண்டும் என்பதே எமது இலக்கு: அப்துல்லா மஹரூப்

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கையில் காணப்படும் துறை முகங்கள் தொடர்ச்சியான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லப்படும். துறைமுக ஊழியர்களின் பிரச்சினைகள் உட்பட பல குறைகள் தீர்க்கப்படும் என துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார்.

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக தனது கடமைகளை இன்று கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் பொறுப்பேற்றதன் பின் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அம்பாந்தோட்டை,கொழும்பு மற்றும் காலி, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் துறைமுகங்கள் காணப்படுகிறது. இவ்வாறான துறை முகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் நாட்டின் தேசிய வருமானத்திற்கும் பாரிய பங்களிப்புக்கள் துறைமுகம் ஊடாக காணப்படும்.

புதிதாக பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் துறை முகங்கள் என்பது மிக முக்கியமான ஒரு அமைச்சாக காணப்படுகிறது. தொடர்ச்சியான அபிவிருத்திகள் தொடரும் தொடர வேண்டும் என்பதே எமது இலக்குமாகும். எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க, வர்த்தக வாணிப கைத்தொழில் மற்றும் நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீளக் குடியேற்றுதல் கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.சி இஸ்மாயில், ஏ.எச்.எம்.பௌசி உட்பட பிரதியமைச்சரின் குடும்பஸ்தர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்று பிரதியமைச்சருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers