கந்தளாய் குளத்தின் திறந்த வெளியரங்கில் விசேட கலந்துரையாடல்

Report Print Mubarak in அரசியல்

திருகோணமலை - கந்தளாயில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுடன் எதிர்கால பிரதேச அபிவிருத்தி மற்றும் கட்சியின் வளர்ச்சி சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளர் அருண சிறிசேனவின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று கந்தளாய் குளத்தின் திறந்த வெளியரங்கில் நடைபெற்றுள்ளதுடன், எதிர்வரும் தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கந்தளாய் பிரதேசத்தில் உள்ள 23 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் சேருவில அமைப்பாளர் அருண சிறிசேனவின் தேர்தல் தொடர்பான வேலைத்திட்டம் அடங்கிய கைநூலும் வெளியிடப்பட்டுள்ளது.