ஜனாதிபதித் தேர்தலில் ரணில் தரப்பின் வெற்றி உறுதி! அகிலவிராஜ் காரியவசம் நம்பிக்கை

Report Print Rakesh in அரசியல்

எதிர்வரும் காலத்தில் பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த ஜனாதிபதித் தேர்தலில் தங்களுடைய கட்சி வெற்றி பெறும் என்பதில் நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகவெரட்டிய பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று எதிர்வரும் 10 வருடங்களுக்கு சக்திமிக்க அரசு ஒன்றை அமைப்பதற்கான திறமை ஐக்கிய தேசிய முன்னணிக்கு இருக்கின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.