மகிந்த தரப்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர்? முடிவில்லாமல் தொடரும் குழப்பம்

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இதுவரையில் எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலேயே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவு செய்யப்படுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியும் இருந்தன.

இந்நிலையிலேயே, விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.