தயார் நிலையில் கோத்தபாய! களத்தின் இலக்கு குறித்து பசில் முக்கிய கருத்து

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்துலக சூழ்ச்சிக்கார்களையே தாம் இலக்கு வைத்து தேர்தல் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர்,

2019ஆம் ஆண்டு முடிவுக்குள், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமையிலான புதிய கூட்டணியில் இருந்து ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.

கடந்த தேர்தலில் சில மாவட்டங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி ஆகிய கட்சிகளை விட, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அதிக பலத்தை நிரூபித்திருக்கிறது. எதிர்காலத் தேர்தல்களில் அதனை விடப் பெரிய பலத்தைப் பெறும்.

தற்போது தமது கட்சியின் இலக்கு ரணில் விக்கிரசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ அல்லது நவீன் திசநாயக்கவோ அல்ல. அனைத்துலக சூழ்ச்சிக்காரர்களையே நாம் இலக்கு வைத்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும் என்றும், ஜனாதிபதித் தேர்தல் நடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், மக்கள் விரும்பினால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், மொட்டுச் சின்னத்தில் தமது கட்சியில் ஒருவர் களமிறங்குவார் என்று குறிப்பிட்டிருக்கும் பசில் ராஜபக்ச தனது சகோதரர் குறித்து தான் பேசியிருக்கிறார் என்கின்றன தென்னிலங்கை கருத்துக்கள்.

எதுவாயினும் மகிந்த ராஜபக்ச எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்கின்றன அக்கட்சி வட்டாரத்தகவல்கள்.