மாகாணசபைத் தேர்தலில் வடக்கில் தோல்வியடைவோம்! மகிந்த தரப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் வடக்கு மாகாணத்தில் தாம் தோல்வியைத் தழுவுவோம் என மகிந்த தரப்பு எதிர்வு கூறியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு மாகாணசபையைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணசபைகளையும் நாம் கைப்பற்றுவோம்.

எதிர்வரும் சிங்களப் புத்தாண்டு காலப் பகுதியில் பொதுஜன முன்னணியினால் நிறுத்தப்படும் வேட்பாளர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாவார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கோராது, ஐக்கிய தேசியக் கட்சி துணிவிருந்தால் மாகாணசபைத் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.