மீண்டும் சரியான பாதைக்கு திரும்பி வாருங்கள்! மைத்திரிக்கு சந்திரிகா காட்டமான கடிதம்

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் சரியான பாதைக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைகோர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் ஜனாதிபதி கைகோர்த்துள்ளதாகவும், அதை ஜனாதிபதி விடுத்து சரியான பாதைக்கு வரவேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற செய்வதற்கு சந்திரிகா குமாரதுங்க கடுமையாக உழைத்திருந்தார்.

எனினும், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து மைத்திரி மற்றும் மகிந்த ஆகியோர் கூட்டுச் சேர்ந்தனர். இதனால் மைத்திரி மற்றும் சந்திரிக்காவிற்கு இடையில் மோதல் நிலை உருவானது.

தொடர்ந்தும், சந்திரிகாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு விடயங்களிலும் புறக்கணித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்தது.

இந்நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு காட்டமாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.