கோத்தபாயவும் மைத்திரியும் நெருங்கிய நட்பில்! நேரம் வரும்போது பொருத்தமான முடிவை வெளியிடக் காத்திருக்கும் சிறிசேனா

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நேரம் நெருங்கும் போது பொருத்தமான தீர்மானத்தை அறிவிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஸ்ரீலங்கா பெரமுன ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உற்ற நண்பர்கள். அதனை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக வருவதாயின் நாம் எமது இரு கரங்களையும் உயர்த்தி விருப்பம் தெரிவிப்போம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நேரம் நெருங்கும் போது பொருத்தமான தீர்மானத்தை அறிவிப்பார் என்றார்.

இதேவேளை, மக்கள் தயார் என்றால் தான் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

மறுபுறத்தில் மொட்டிச் சின்னத்தில் இருந்து தான் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.