கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு! மைத்திரி - மகிந்தவிற்கு இடையில் கருத்து மோதல்

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றிருந்தார்..

இதனையடுத்து பொது மேடைகளில் கடுமையாக மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சித்து வந்தார்.

எனினும், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையடுத்து மகிந்த மற்றும் மைத்திரி ஆகியோர் கூட்டு சேர்ந்தனர். அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி ஒன்றை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு கொழும்பு அரசியிலில் தலைதூக்கியுள்ளது.

இதற்கு ஏற்றால் போலவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்ற தொனியில் பேசி வருகின்றனர்.

எனினும், அடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டிட போகும் வேட்பாளர் குறித்து மகிந்த - மைத்திரி தரப்பினர்களுக்கு இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளதாக கொழும்பு அரசியலில் இருந்து அறியமுடிகின்றது.

குறிப்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் கூறிவரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் அதற்கு மாறாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கு இடையில், “இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதால், மக்கள் தயார் என்றால், எந்தவொரு சவாலை எதிர்கொள்வதற்கும் தான் தயாராகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து மகிந்த மற்றம் மைத்திரிக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.