ரணிலை வீழ்த்துவதற்கு மகிந்த தரப்பு வகுக்கும் திட்டம்!

Report Print Murali Murali in அரசியல்

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைப்பதே தமது நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்டாயம் ஒரு புதிய அரசியல் கூட்டணி தோற்றம் பெற வேண்டும் எனவும், அது ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவருடனும் கூட்டணியமைத்துக் கொள்ளாமல் வெற்றிபெற முடியும். சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் தற்போது கூட்டணியமைத்துக் கொள்ளாவிடின் அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமையும்.

ஆகையினால், பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியமைத்து இடம்பெறவுள்ள தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தீர்மானித்துள்ளன.

எவ்வாறாயினும், புதிய கூட்டணி தொடர்பில் குறிப்பிடப்பட்டதே தவிர அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுரையில் இரு தரப்பில் இருந்தும் முன்னெடுக்கப்படவில்லை.

புதிய கூட்டணி தொடர்பில் மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இரண்டு தரப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு விருப்பமற்ற தன்மையே காணப்படுகின்றது.

எனினும், தற்போதைய நிலையில் புதிய கூட்டணி அமைக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைப்பதே தமது நோக்கமாகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.