இலங்கையுடன் உறவை பலப்படுத்த பிலிப்பைன்ஸ் விருப்பம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையுடன் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி ரொட்ரிக்கோ டட்டர்டி எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிலிப்பைன்ஸ்ற்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

இதனை முன்னிட்டே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பு வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி சிறிசேன, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை நாளையதினம் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.