அமெரிக்காவின் உடன்பாட்டு வரைபை நிராகரித்தது இலங்கை!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு, இலங்கை பாதுகாப்பு அமைச்சுடன் உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டிருந்தது.

இதற்காக சமர்ப்பித்திருந்த வரைவில், இருதரப்பு பாதுகாப்பு வசதிகளை உருவாக்குதல், பயிற்சிகள், விநியோகங்கள், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஆவணத்தை இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழுவொன்று ஆராய்ந்தது. இந்நிலையில் அமெரிக்கா முன்வைத்திருந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைபின் பெரும்பாலான உள்ளடக்கங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.