இரண்டாம் தடவையும் தோல்வியடைந்துள்ள கல்முனை மாநகரசபையின் வரவு செலவு திட்டம்

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

கல்முனை மாநகரசபை வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோல்வியடைந்துள்ளது.

கல்முனை மாநகரசபை நேற்று மாலை இடம்பெற்ற அமர்வின் போது வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்காக முன்வைக்கப்பட்டது.

இதன் போது ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சாய்ந்தமருது சுயேச்சை அணியினர், குதிரை மற்றும் கொடி உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி சேனைக்குடியிருப்பு உறுப்பினர் ஒருவர் உட்பட மொத்தம் 25 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதியும் வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பிற்காக சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட போதும் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers