மைத்திரிக்கு சந்திரிகா அனுப்பிய கடிதம்! அவர் சொல்ல வருவது என்ன?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சுதந்திரக் கட்சி செயற்படக் கூடாது என்று முன்னாள ஜனாதிபதி சந்திரிகா குறிப்பிடுவதன் மூலம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதா அவருடை நிலைப்பாடு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் கடிதம் அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை காணப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடனும் குழுக்களுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணைந்து செயற்படுவதை தான் அனுமதிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டிந்தார்.

அக்கடிதம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதில் அளித்துள்ள அவர்,

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு காணப்படும் தனிப்பட்ட கோபங்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதற்கேற்ப செயற்பட வேண்டும் என எதிர்பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சந்திரிகா குமாரதுங்க குறிப்பிடுவதைப் போன்று மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து சுதந்திரக் கட்சி செயற்படக் கூடாதெனில் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதா அவருடை நிலைப்பாடு என்பதே எமது கேள்வியாகும்.

அது தான் அவருடைய நிலைப்பாடு என்றால் அதற்கு நாம் ஒரு போதும் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers