மகிந்த அணியினர் எடுக்கும் முடிவினால் காத்திருக்கும் ஆபத்து!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணி அமைத்தால் குறுகிய காலத்தில் சுதந்திரக் கட்சி பாரிய அழிவினையே சந்திக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கவுள்ளமை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது பேசிய அவர்,

எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணி அமைத்தால் குறுகிய காலத்தில் சுதந்திரக் கட்சி பாரிய அழிவினையே சந்திக்கும்.

அவர்களுடன் இணைந்து கூட்டணி அமைப்பதாகக் கூறும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வீணான சவாலுக்கு உள்ளாக ஆயத்தமாகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது வரலாற்று ரீதியானதொன்றாகும். எனினும் அண்மையில் சிலரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறுவது கட்சியை மேலும் வீழ்ச்சியடையவே செய்யும் என்றார்.