மகிந்தவா மைத்திரியா? என்று வந்தால் மைத்திரி வேண்டாம் என்கிறார் குமார வெல்கம

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மகிந்தவா மைத்திரியா என்ற தெரிவு வருமாயின் என்னுடைய தெரிவு மகிந்த ராஜபக்ச தான் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நியமிக்க பொதுஜன பெரமுன ஆதரவளிப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர், அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நியமிக்க ஆதரவளிக்கப்போவதில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்னை பொறுத்தவரையில் மகிந்த ராஜபக்சவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். 19 ஆம் திருத்தத்தில் அவருக்கு போட்டியிட முடியாது என்று எந்த தடையும் இல்லை.

அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச வேட்புமனுத் தாக்கல் செய்தால் அதனை நிராகரிக்கப்போவதில்லை என தேர்தல்கள் ஆணையாளரும் தெரிவித்திருக்கின்றார். அதனால் மகிந்த ராஜபக்சவே எனது தெரிவாகும் என்றார்.