ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு

Report Print Mubarak in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஏ.பாஹிர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை சேருவில தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான வைத்தியர் அருண சிறிசேனாவிடமிருந்து இன்று பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளர்களுடனான சந்திப்பு கந்தளாய் குளக்கரை பகுதியில் நடைபெற்ற போதே கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் குறித்த கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இதன் போது கந்தளாய் பிரதேசத்தில் உள்ள 23 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் கட்சியின் முக்கியஸ்தகர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

அத்தோடு எதிர்வரும் தேர்தல் விடயம் தொடர்பாகவும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது சேருவில அமைப்பாளர் அருண சிறிசேனாவின் தேர்தல் தொடர்பான வேலைத்திட்டம் அடங்கிய கைநூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதனை கந்தளாய் பிரதேச உறுப்பினர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.