மெனிலா நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Report Print Murali Murali in அரசியல்

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெனிலா நகரை சென்றடைந்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி Rodrigo Duterteவின் விசேட அழைப்பின் பேரில் ஐந்து நாள் அரசமுறை விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் பிலிப்பைன்ஸ் பயணமானார்.

நாளைய தினம் பிலிப்பின்ஸ் மலகாநாங்கில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக வரவேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இது தொடர்பான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெனிலா நகரை சென்றடைந்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.