ஆளுநர் நியமனங்கள் தொடர்பிலும் சிக்கல்! மற்றுமொரு நெருக்கடியில் மைத்திரி

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்று நிருபங்களை மீறி ஆளுனர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிவில் அமைப்புக்களின் ஒன்றிய அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...

70 வயதுக்கும் குறைதல், பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மாகாண ஆளுனர்கள் நியமிக்கப்பட வேண்டும் என சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த சுற்று நிருபத்தின் நிபந்தனைகளுக்கு புறம்பான வகையில் ஜனாதிபதி மைத்திரி நியமனங்களை மேற்கொண்டுள்ளதாக சமன் ரட்னப்பிரிய நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்கு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த சுற்று நிருபத்திற்கு முரணான வகையிலேயே அண்மையில் ஜனாதிபதி நியமனங்களை மேற்கொண்டு வருகின்றார்.

சிலருக்கு பதவி வழங்குவதற்கு இந்த சுற்று நிருபத்தின் நிபந்தனைகள் தடையாக காணப்படுகின்றன.

அரச நிறுவனங்களின் அதிகாரிகளை அந்தந்த துறைசார் அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டும் அதில் ஜனாதிபதி தலையீடு செய்ய முடியாது.

தேவை ஏற்பட்டால் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

அரச நிறுவனங்களின் அதிகாரிகளை நியமிக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஒரு விதமாகவும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஒரு விதமாகவும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி தாம் வெளியிட்ட சுற்று நிருபத்திற்கு புறம்பான வகையில் அரச நிறுவனங்களின் அதிகாரிகளை நியமித்து வருகின்றார் என சமன் ரட்னபிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

Latest Offers

loading...