தம்பி கோத்தபாயவை தோற்கடிப்பேன்! அதிரடியாக களமிறங்கும் அண்ணன்

Report Print Vethu Vethu in அரசியல்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக ராஜபக்ஷ ரெஜிமென்டின் மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட சமல் ராஜபக்ஷ இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு நான் பொருத்தமானவர் எனின், நானும் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கிறேன் என சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன முன்னணியின் வேட்பாளராக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். எனினும் தற்போது யார் என்பதை உறுதியாக கூற முடியாது என சில நாட்களுக்கு முன்னதாக சமல் ராஜபக்ச கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளதை அடுத்து, சமல் ராஜபக்ச, தானும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்சவின் இந்தக் கருத்து, ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே ஜனாதிபதி பதவிக்கான போட்டி, தீவிரமடைந்துள்ளதை வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும் கோத்தபாயவை தோற்கடித்து தன்னால் வெற்றி பெற முடியும் என சமல் ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.